For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி அருகே கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்ணெண்ணை, 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி அருகே கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்ணெண்ணை பறிமுதல் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும்700 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி, மானிய மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் பல வழிகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

1000 litre of kerosene confiscated in Kanyakumari

இந்நிலையில் அழகிய மண்டபம் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட மாருதி காரினை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், காரில் மறைத்து 700 கிலோ அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதை போன்று நித்திரவிளை பகுதி வழியாகவும் மினி டெம்போவில் கொண்டு செல்ல முயன்ற 1000 லிட்டர் மண்ணெண்ணையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1000 litre of kerosene confiscated in Kanyakumari

இரு வாகனங்களில் இருந்து ஓட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் காப்பிகாடு உணவு கிடங்கில் ஒப்படைத்த போலீசார் தப்பி ஓடிய ஓட்டுநர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

English summary
The police seized 1000 lit kerosene and 700 kg ration rice trying to smuggle into Kanyakumari in Kerala. The police who escaped vehicles have been flown by drivers who fled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X