For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 109 மீனவர்களுக்கு காரைக்காலில் உற்சாக வரவேற்பு

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 109 மீனவர்களுக்கு காரைக்காலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 109 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு காரைக்கால் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டு சிறைவில் அடைக்கப்பட்ட 109 தமிழக மீனவர்களை இன்று விடுவிக்கப்பட்டனர். இன்று காலை 11 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களை, இலங்கை கடற்படை இந்திய கடலோர காவற்படையினரிடம் சர்வதேச எல்லையில் ஒப்படைத்தது.

 109 fishermen set free from Srilankan Navy

அதன் பிறகு அவர்கள் அனைவரும் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம், ராமநாதபுரம், காரைக்கால், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று வீடு திரும்பியதால், கடலோர மீனவ கிராம மக்கள் தங்களது உறவினர்களைக் கண்டு உற்சாகம் அடைந்தனர்.

English summary
109 fishermen set free from Srilankan Navy. Today Srilankan Navy to release 109 fishermen from srilankan jail. They are handovered to indian coastal guard by 11pm in overseas coastal Border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X