For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாவாடை, தாவணி, ஜமுக்காளத்தை கைத்தறியில் மட்டுமே தயாரிக்க மத்திய அரசு உத்தரவு!

Google Oneindia Tamil News

நெல்லை: 11 வகை துணி ஆடைகளை உற்பத்தி செய்ய அரசு திடீர் தடை விதித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை கைத்தறி சட்ட உதவி அமலாக்க அலுவலர் கூறியிருப்பதாவது, "பாரம்பரிய தொழிலான கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள், விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளால் சந்தையில் போட்டியை சந்திக்கின்றன.

11 handloom cloth materials not allowed looming…

இதை தவிர்க்கும் வகையில் பருத்தி மற்றும் பட்டு சேலைகள், பட்டு வேஷ்டி, துண்டு, அங்கவஸ்திரம், லூங்கு, பெட்ஷீட், ஜமுக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பிளி, ஷால், மப்ளர், உள்ளன் டீவீட், பாவாடை, தாவணி போன்ற ரகங்களை மட்டும் கைத்தறியில் மட்டும உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசின் ஜவுளி துறை அமைச்சகம் ஓதுக்கீடு செய்துள்ளது. இந்த 11 ரகங்களை கைத்தறியில் அல்லாது வேறு வகையில் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடர்ந்து 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது உற்பத்தியில் ஈடுபடும் ஓவ்வொரு தறிக்கும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்க கைத்தறி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் கைத்தறி அல்லாத விசைத்தறிகளில் துணி உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மேற்கண்ட 11 ரகங்களில் உற்பத்தி செய்ய கூடாது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு உதவி அமலாக்க அலுவலர் அலுவகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
11 type of materials banned to create other than handloom in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X