For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்காடு இடைத் தேர்தல்.. 12 பேரின் மனுக்கள் ஏற்பு... 23 மனுக்கள் தள்ளுபடி

Google Oneindia Tamil News

Saroja and Maran
சேலம்: ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்களில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட 12 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சரியாக இல்லாத 23 மணுக்கள் நிராகரிக்கப்பட்டன.

டிசம்பர் 4ம் தேதி ஏற்காடு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்தது. திமுக சார்பி்ல் மாறன், அதிமுக சார்பில் சரோஜா உள்பட மொத்தம் 35 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சபாபதி, மத்திய தேர்தல் ஆணைய பார்வையாளர் முன்னிலையில் நடந்தது.

இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டிருந்த 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட 12 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

நாளை மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

English summary
12 nomination papers including ADMK, DMK have been accepted for Yercaud by poll and 23 papers were rejected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X