For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் மையத்தில் அலுவலர்களுக்கு 12 கட்டளைகள்

Google Oneindia Tamil News

நெல்லை: பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் மையங்களில் அலுவலர்கள் கடைப்பிடிக்க 12 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதில், பள்ளியில் மதிப்பீட்டுக்கு பணிக்கு போதுமான அறைகள், தளவாடங்கள், ஆண், பெண் இருபாலருக்கும் தனி தனி கழிவறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையற்ற மின்சாரம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளனவா எ்ன்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முகாம் நடைபெறும் பள்ளியை சேர்ந்த அலுவலர்கள், பணியாளரும் எவரும் மதிப்பீட்டு பணி நேரத்தில் பள்ளி வாளகத்தில் இருக்க கூடாது. மையங்களில் ஜன்னல்கள் பலகைகளால் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.

விடைத்தாள் கட்டு்கள் ஈரத்தால் பாதிப்பு, வெப்பத்தால் பாதிப்பு, எதிர்பாராத மழை இவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். மதிப்பீட்டு அறையில் எலிகள், கரையான், பூச்சிகள் நுழைந்து விடைத்தாள்களை சேதப்படுத்தாமல் இருக்க தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் முகாம் வாளகத்தில் புகை பிடிக்க கூடாது. முகாம்களில் பணிபுரிபவர்கள் மதிய உணவுக்கு முகாம் நுழைவு வாயிலேயே உணவு கடைகள் இருக்க வேண்டும். பணியார்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உளளவர்களும் இருப்பர்.

அவர்களின் நலன் கருதி அவர்களை உணவு இடைவெளிக்கு சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும். முகாம்களில் செல்போன் உபயோகிக்க கூடாது.

கடந்த காலங்களில் விடைத்தாள் கட்டுகள் காணாமல் போன நிகழ்கவுகள் நடந்ததால் இதனை தவிர்க்க தேர்வு துறை தனியாக நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறது. இதில் தீத்தடுப்பு சாதனங்கள் மணல் வாளிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்பட 12 புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது தேர்வு துறை.

English summary
The govt examination department has set 12 rules for +2 public examination paper correction work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X