For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் திருக்குறள் திருவிழா: வைரமுத்துக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத்தில் நாளை நடைபெற உள்ள திருக்குறள் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து உள்பட 5 பேருக்கு வள்ளுவர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தை சேர்ந்த 133 மாணவ-மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்று திருக்குறளை ஒப்பிக்க உள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

133 People to Recite Thirukural in Parliament on December 17

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பல அடிகளார், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு திருவள்ளுவர் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதுகிறார்கள். திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியோடு சிறப்புப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

திருவள்ளுவரை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் முயற்சி இது என்று விழாவை ஏற்பாடு செய்து வரும் தருண் விஜய் எம்.பி தெரிவித்துள்ளார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் விமானத்தில் கவிஞர் வைரமுத்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

English summary
Tirukural festival will celebrate on December 17 in Delhi Parliament. 133 People to Recite Thirukural in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X