For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரியில் பேராசிரியையிடம் இருந்து 14 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

கன்னியாகுமரியில் பேராசிரியையிடம் இருந்து 14 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை, ஈரோடு, கன்னியாகுமரியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள்- வீடியோ

    கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பேராசிரியர் ஒருவரிடம் இருந்து 14 சவரன் மதிப்பிலான தாலி சங்கிலியை பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    குழித்துறை நகரம் அருமனை பகுதியைச் சேர்ந்தவர் லிஜிதா. இவர் செவிலியர் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர் பணி முடித்து விட்டு குழித்துறை நகரச் சந்திப்பின் வழியாக பேருந்து நிறுத்தத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    14 Sovereigns of gold Chain snatched from Kanyakumari teacher

    அப்போது அவரது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரு நபர்கள் லிஜிதாவின் கழுத்தில் இருந்த 14 சவரன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பினர். எனினும் லிஜிதா விடாமல் துரத்தியும் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். நகரின் மைய பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் கண் முன் நடந்த இந்த துணிகர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Two of the mysterious men wearing a helmet on a two-wheeler chase 14 sovereign gold chain from professor in Kanyakumari.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X