For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பசுபதி பாண்டியன் 5ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு 144 தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல் 11 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் நத்தவனத்துப்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது 5ம் ஆண்டு நினைவு தினம் வரும் 10ம் தேதி அவரது சொந்த கிராமமான அலங்காரதட்டு பகுதியில் அனுசரிக்கப் பட உள்ளது.

144 ban on thoothukudi

இதில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளனர். எனவே, அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மூன்று தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு நாளை மாளை 6 மணிமுதல் 11 ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிகுமார் பிறப்பித்துள்ளார்.

English summary
Considering the law and order situation on Pasupathi Pandian death anniversary, the Thoothukudi district administration imposed 144 ban for 3 day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X