ஒண்டிவீரன் நினைவு நாள், புலித்தேவன் பிறந்தநாள்... நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
நெல்லை: ஓண்டிவீரன் நினைவு நாள், புலித்தேவன் பிறந்த நாள் விழா போன்றவற்றால் நெல்லை மாவட்டத்தில் இன்றுமுதல் செப்டம்பர் மாதம் 2ம்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சிவகரி தாலுகா நெல்கட்டும்செவல் மஜரா பச்சேரியில் நாளை ஓண்டிவீரன் நினைவு நாளும், பூலித்தேவன் பிறந்தநாள் செப்டம்பர் 1ம் தேதியும் அடுத்தடுத்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி நடக்கும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அந்த அமைப்புகளின் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வர்.
இதனால் சட்டம் ஓழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த வழியாக வாடிக்கையாக சென்று வரும் வாகனங்கள், வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், சர்ககு வாகனங்கள், மாணவ, மாணவிகளின் பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை இயங்கலாம்.
இதர வாகனங்களான மோட்டார், கேப்ஸ், டூரிஸ்ட் கேப்ஸ், ஆம்னி பஸ், ஓண்டி வீரன் நினைவு, பூலித்தேவன் நினைவு நாளுக்கு தொண்டர்களை ஏற்றி வரும் சுற்றுலா வாகனங்கள், தற்காலிக அல்லது சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்கள் ஆகியவை நெல்லை மாவட்ட வருவாய் எல்லைக்குள் இன்று முதல் செப்டம்பர் மாதம் 2ம் தேதி மாலை 6 மணி வரை நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!