For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்கிங்... தமிழிசையுடன் வாதிட்ட மாணவி சோபியா அதிரடி கைது.. !

சோபியாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து, பாஜக ஒழிக என முழக்கமிட்ட சோபியா என்ற மாணவி கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணமானார்.

பாசிச பாஜக ஒழிக

பாசிச பாஜக ஒழிக

அப்போது விமானத்தில் தமிழிசையை பார்த்ததும், சோபியா என்ற இளம் பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று பாஜகவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்ப தொடங்கினார்.

தமிழிசை வாக்குவாதம்

தமிழிசை வாக்குவாதம்

விமானத்துக்குள்ளேயே இப்படி முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை அதிர்ச்சியிடைந்து, பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்து, அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

கைது செய்தனர்

அந்த புகாரின்பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவரின் மகள்தான் சோபியா என்றும், 23 வயதுடைய சோபியா கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

15 நாள் சிறை

15 நாள் சிறை

இதன்பின்னர், சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பிறகு நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்க சோபியாவை போலீசார் கொண்டு செல்ல இருந்தனர். இந்த நிலையில் அவரை திடீரென மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் போலீஸார்.

English summary
15 days police remand for speak against BJP Tamilisai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X