For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடி தாக்கியதில் 15 பேருக்கு காது கேட்கும் திறன் பாதிப்பு– நாமக்கல்லில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல்லில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கியதில் 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு காதுகேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த எஸ்.வாழவந்தியில் நேற்று மதியம் இரண்டு மணியளவில் கனமழை பெய்து கொண்டிருந்தது.

15 members lost their hearing capacity by thunder in Namakkal

அப்போது, அன்குள்ள மாரியம்மன் கோவிலின் பின்புறம் இருந்த சிங்காரப்பாறை என்ற ஒரு பாறை மீது உள்ள விநாயகர் கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பூமணி என்பவர் மழைக்கு ஒதுங்கி உள்ளார்.

அப்போது பயங்கர சத்தத்துடன், கண்ணை பறிக்கும் ஒளியுடன் மின்னல் தாக்கியுள்ளது. அப்போது பலமான இடியும் நிலத்தில் இறங்கியது. அதேபோல், கோவிலுக்கு முன்புறம் உள்ள கூரை கொட்டகையில் இருந்த மரகதம் மற்றும் பூசாரி பெரியசாமி ஆகியோருக்கும் காலில் மின்சாரம் தாக்கியது போல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர இடி சத்தம் கேட்டு, அப்பகுயில் வசிக்கும், பிச்சைமுத்து, குமார், குண்டுமணி, மதுரைவீரன், பத்மநாபன், மணி உள்பட 15க்கும் மேற்பட்டோருக்கு காதில் வலி ஏற்பட்டதுடன், காது கேட்கும் திறனும் பாதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

English summary
Namakkal district people 15 members suffered ear problem due to thunder storm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X