போலீசாருக்கு அதி நவீன 150 சிசி பைக்.... தொடக்க விழாவிலேயே ஸ்டார்ட் ஆகாத 10 பைக்குகள்!
நெல்லை: நெல்லையில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் போலீசாருக்கு அதி நவீன பைக்குகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பத்து பைக்குகள் தொடக்க விழ ாவிலேயே ஸ்டார்ட் ஆகாமல் பல்லைக் காட்டி தர்மசங்கடப்படுத்தின.
தமிழகத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை உடனே பிடிக்கவும் காவல் துறையினருக்கு அதி நவீன பைக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் 9 சப் டிவிஷனுக்கு உள்பட்ட காவல் நிலையங்களுக்கு 47 பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு சப் டிவிஷனுககு தலா 5 பைக்குகள் வீதம் 45 பைக்ககுளும், கூடுதலாக 2 பைக்குகளும் வழங்கப்பட்டுள்ளது. 9 சப் டிவிஷன் காவல் நிலையங்களுக்கான பைக் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. எஸ்பி விக்ரமன் கொடியசைத்து பைக்ககுளை வழியனுப்பி வைத்தார்.
பின்னர் எஸ்பி விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குற்றங்களை தடுக்கவும், திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தெரிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குற்றவாளிகளை பிடிக்கவும் காவல் துறைக்கு 150 சிசி இன்ஜின் பொருந்திய நவீன பைக்குகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சப் டிவிஷனுக்கு 47 பைக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
போலீசார் இரண்டு ஷிப்டுகளாக இந்த பைக்குகளில் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு அவசர தகவல் வந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வர். இதன் மூலம் குற்ற செயல் நடைபெறுவது தடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக எஸ்பி விக்ரமன் கொடியசைத்த போது பைக்குகள் புறப்பட தயாராக இருந்தன. அப்போது சுமார் 10 பைக்ககள் என்ஜின் கோளாறு, பெட்ரோல் இல்லாதது போன்ற காரணங்களால் இயங்க மறுத்தன. கிக் ஸ்டாரை அடித்து பார்த்தும் பைக்குகள் கிளம்பாததால் போலீசார் சோர்ந்து விட்டனர். பின்னர் ஒரு வழியாக கோளாறு சரி செய்யப்பட்டு அவை அனுப்பி வைக்கப்பட்டது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்










Click it and Unblock the Notifications