சென்னையில் விநாயகர் ஊர்வலம் : பட்டினப்பாக்கம் கடலில் 1,500 சிலைகள் விசர்ஜனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இதற்காக பல பகுதிகளில் இருந்தும் சென்னை காமராஜர் சாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 25ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வீடுகள், தெருக்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சென்னை முழுவதும் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகள் வைத்துள்ளனர். 3 அடி முதல் 13 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன.

சிலைகள் கரைக்க ஏற்பாடு

சிலைகள் கரைக்க ஏற்பாடு

அனுமதி வழங்கப்பட்ட இடங்களான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை மற்றும் கார்போரண்டன் யூனிவர்சல் கம்பெனியின் பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் சிலைகள் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கிரேன்கள் நிறுவப்பட்டு சிலைகளை கடலில் கரைக்க போலீசார் உரிய முன்னேற்பாடுகள் செய்துள்ளனர்.

பட்டினப்பாக்கம் கடற்கரை

பட்டினப்பாக்கம் கடற்கரை

இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 1,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்படுகின்றன. இந்த ஊர்வலத்தில் 1,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1500 சிலைகள் கரைப்பு

1500 சிலைகள் கரைப்பு

வட சென்னையில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் முத்துசாமி பாலம் அருகே ஒன்று சோர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே கடலில் கரைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. இதேபோல வள்ளுவர்கோட்டம் அருகே ஒன்று கூடி சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை அருகே ஒன்று கூடி பாரதி சாலை வழியாக சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு சென்று கரைக்கப்படுகிறது. பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பட உள்ளதால், காமராஐர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vinayagar idols of various sizes and hues on Thursday as they were taken for immersion at Pattinapakkam sea shore.A senior police official said a total of 1500 idols were brought for immersion.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற