For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டுக்கல் அருகே 16 அடி நீள மலைப்பாம்பை பிடித்த கிராம மக்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது. பாம்பை பிடித்த கிராம மக்கள் பத்திரமாக தீயணைப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் அருகே ஆத்தூரிலிருந்து காமராஜர் அணைக்கு செல்லும் வழியில் ராமசாமி என்பவரது தோட்டத்து பூ வயலில் 16 அடி நீளம் 35 கிலோ எடை கொண்ட மலைப் பாம்பை ஊர் பொதுமக்கள் பிடித்து தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16-foot python found near former garden in Dindugul

மழைக்காலங்கள் என்றாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி ஊருக்குள் படையெடுக்கும் மலைபாம்புகள் அங்குள்ள ஆடுகள், கோழிகளை வேட்டையாடுவதுடன் சிறுவயது உடையவர்களையும் வேட்டையாடுவது வழக்கம், இந்நிலையில் ஆங்காங்கே மலைப்பாம்புகளை அப்பகுதி மக்கள் உயிருடன் பிடித்து தீயணைப்பு வீரர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆத்தூர் அருகே, சுமார் 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புவை உயிருடன் பிடித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, பிடிபட்ட பாம்புக்கு எந்த வித சேதாரமும், இல்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மலைப்பாம்புகளை பெற்றுக் கொண்ட தீயணைப்பு துறையினர் அந்த மலைபாம்புவை மலைப்பிரதேசத்தில் கொண்டு விட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

English summary
The python found on a fomer forest near Aathur in Dindugul.Village people catch the python.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X