For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 16 முறை அமைச்சர்கள் மாற்றம்: இப்போது முதல்வரும் மாறினார்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் 17 முறை அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றதை அடுத்து தற்போது புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் நிதியமைச்சரான ஓ.பன்னீர்செல்வம்.

16 times Cabinet reshuffle in Tamil Nadu

தமிழக சட்டசபைக்கு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 203 தொகுதிகளை கைப்பற்றியது. 160 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஜெயலலிதா கடந்த மே 17ஆம் தேதி பதவி ஏற்றார்

அதிமுக அரசு பதவியேற்று மூன்றாண்டுகளும் நான்கு மாதங்களும் நிறைவந்துள்ளது.
முதல்முறையாக அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றவர்களில் பெரும்பாலோனோர் இப்போது அமைச்சர்களாக இல்லை. காரணம் அடிக்கடி நிகழும் அமைச்சரவை மாற்றம்தான்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் விபரம்:

ஜெ. ஜெயலலிதா - முதல்வர்

ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்,

கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்

நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்

கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை

அமைச்சர் சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்

ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்

அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்

சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்

பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்

சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்

செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை, அமைச்சர்

கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்

எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்

எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்

கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்

எஸ்.பி. வேலுமணி - சிறப்புத்திட்டத்துறை அமைச்சர்

டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்

பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்

ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்

எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்

செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்

பி.வி. ராமணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்

ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்

என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்

கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்

இசக்கி சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்

புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்

என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்

16 முறை அமைச்சரவை மாற்றம்

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி 16 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பி.வி.ரமணா அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதனையடுத்து அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது.

புதிய முதல்வர் தேர்வு

இதனையடுத்து புதிய முதல்வராக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் வகித்து வந்த துறைகளுடன் ஜெயலலிதாவின் பொறுப்பில் இருந்த பொதுத் துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை ஆகிய துறைகள் பன்னீர் செல்வம் வசம் வரும் என்று தெரிகிறது.

அடிக்கடி மாறிய அமைச்சரவை

மூன்றாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் 16 முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. இம்முறை முதல்வரே மாற்றப்பட்டுள்ளார். புதிய முதல்வர் மாறியிருப்பதால் தற்சமயத்திற்கு இனி அமைச்சரவை மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது.

English summary
TamilNadu Cabinet was reshuffled for over 16 times in Jayalalithaa’s current term as Chief Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X