For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கொடூர துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் பட்டியல்- வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி, 17 வயது பள்ளி மாணவியையும் சுட்டு கொன்றுள்ளது காவல்துறை.

    கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.
    வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.

    17 Year old girl shot dead by the police in Tuticorin

    இதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.

    வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு" என்பதுதான். ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை.

    இலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    English summary
    17 Year old girl shot dead by the police in Tuticorin while protesting against Sterlite.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X