For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கிரேஸ் மார்க்" வழங்கப்பட்ட வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200!

Google Oneindia Tamil News

சென்னை: கடினமான வினாக்கள் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை நடைபெற்றாது. இதில், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு முக்கியப் பாடமான வேதியியல் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்றது.

1703 scores centum in Chemistry

இந்தத் தேர்வு மிகவும் கடினமானதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடினமாக கேள்விகள் சிலவற்றிற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக வேதியியல் பாட ஆசிரியர்கள் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினா 17 (பி பிரிவு), அதேபோல, ஏ பிரிவில் 18, வினா எண் 70-இல் பி ஆகிய இரு வினாக்களுக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதிலை அளித்திருந்தாலும் அவர்களுக்கு முறையே 1, 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்தது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நெல்லை பேராசிரியர் சாமுவேல் ஆசீர்ராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர், கருணை மதிப்பெண்கள் வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கு முடிவுக்கு வரும் வரை, பிளஸ் 2 தேர்வு முடிவை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த சூழ்நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், கடினமான வினாக்கள் இருந்ததாக கூறப்பட்டு, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட வேதியியல் தேர்வில் 1703 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

இது தவிர இயற்பியலில் 5 பேரும், உயிரியலில் 775 பேரும், விலங்கியலில் 20 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

English summary
In Plus 2 exams, 1703 students have scored 200/200 in chemistry, even though the question paper was tough.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X