For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. அதிமுகவிற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக-விற்கு எதிராக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக-விற்கு எதிராக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் வெளியானது.தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று தலைமை வழக்கறிஞர் இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

18 MLA Disqualification: Judge Sundar gets murder threat for taking a stand against ADMK government

ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக-விற்கு எதிராக தீர்ப்பளித்ததற்காக அவரை சிலர் மிரட்டி இருக்கிறார்கள்.

அதிமுகவிற்கு எதிராக எப்படி தீர்ப்பு வழங்கலாம் என்று கேள்வி கேட்டு, நீதிபதி. சுந்தருக்கு மர்மநபர்கள் கொலைமிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி.சுந்தருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

English summary
18 MLA Disqualification Verdict.: Judge Sundar gets murder threat for taking a stand against ADMK government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X