For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லட்சத்தீவு அருகே கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 180 மீட்பு.. மத்திய அரசு தகவல்

லட்சத்தீவு அருகே கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.. அதிர்ச்சியில் தமிழக அரசு!- வீடியோ

    டெல்லி: லட்சத்தீவு அருகே கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலேயே கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சூறையாடியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்தது.

    பலத்த காற்று வீசியதோடு கடல் சீற்றமும் ஏற்பட்டது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ளனர்.

    தொடர் போராட்டங்கள்

    தொடர் போராட்டங்கள்

    ஆனால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக மீனவர்கள் மீட்பு

    தமிழக மீனவர்கள் மீட்பு

    இந்நிலையில் லட்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு அருகே 17 படகுகளில் கடலில் தத்தளித்த 180 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடற்படை கப்பல்மூலம் மீட்பு

    கடற்படை கப்பல்மூலம் மீட்பு

    அவர்கள் அனைவரும் கடற்படை கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றுவரை 259 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சி

    மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சி

    அவர்கள் விரைவில் தமிழகம் கொண்டுவரப்படவுள்ளனர். லட்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் மீனவ குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    180 Tamilnadu fishermen rescued near in Lakshdeep said central govt. Fishermen were in 17 boats near in Lakshadeep.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X