For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே. நகரில் 1947 போலி வாக்காளர்கள் - திமுகவை பாராட்டிய ஹைகோர்ட்

போலி வாக்காளர்களை கண்டறிந்த திமுகவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஆர்.கே நகரில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கக்கோரி திமுக வழக்கு தொடர்ந்தது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே நகரில் சட்டசபைத் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி வாக்காளர்களை கண்டறிந்த திமுகவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியில் ஆர்.கே.நகரில் 5117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என கூறி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1947 Fake voters in RK nagar High court

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி, 1,947 வாக்காளர்கள் பெயர் இரண்டு இடங்களில் இருக்கின்றன, அவை நீக்கம் செய்யப்பட்டுவிட்டன எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆர்.கே நகரில் 1947 போலி வாக்காளர்கள் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் தேர்தலில் ஒரு வாக்கு கூட முடிவை மாற்றும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

English summary
Madras High Court order to Election commission 1,947 multiple entries in RK Nagar poll, High court greets DMK for fake voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X