For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்… கைதான வக்கீலுடன் தொடர்பு.. உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

சென்னை சூளைமேட்டில் காரில் இருந்து ரூ. 2 கோடி பழைய நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ரூ. 2 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த இரண்டு பேர் திடீரென இறங்கி தப்பித்து சென்றனர்.

2 crores old notes seized, Intelligence sub inspector transferred

இதனை அறிந்த போலீசார் காரில் சோதனை செய்தபோது ரூ.1.95 கோடி பழைய நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரின் உரிமையாளரான வழக்கறிஞர் சிவக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சிவக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நடத்திய விசாரணையில் இந்த குற்றத்தில் உளவுத்துறை உதவி ஆய்வாளர் ஆல்பர்ட்டுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. அதன் அடிப்படையில், உளவுத்துறை உதவி ஆய்வாளர் ஆல்பர்ட் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
Intelligence sub inspector Albert was transferred to police control room for connecting with 2 crores old notes seized in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X