For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெய்வேலியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி... கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்

Google Oneindia Tamil News

கடலூர்: நெய்வேலி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி திடீர்குப்பம் வட்டம் 30-ல் வசித்து வந்த தங்கராஜ் (46), சின்னதுரை (37) ஆகிய இருவரும் என்.எல்.சி நிறுவனத்தில் அவுசிக் கோர்ஸ் பிரிவில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தனர்.

2 die after inhaling poisonous gas in Neyveli

சி.எஸ்.ஐ.எப். குடியிருப்பு அருகேயுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யவதற்காக இரு தொழிலாளர்களும் தொட்டியில் இறங்கியுள்ளனர். அப்போது, தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உயிரிழந்தவரின் குடுபத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆதி தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன் கூறுகையில், அரசு சார்ந்த நிறுவனங்களில் இது போன்ற சம்வங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே இதற்கு முன்னதாக பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அனைத்துமே மூடி மறைக்கப்படுகிறது. சென்னையிலும், மதுரையிலும் இது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளது.

சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக, கடும் தண்டனை விதிக்கப்படும் என கூறுகிறது. முன்னதாக நடைபெற்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு போய் சேரவில்லை. ஆகவே உயிரிழந்த நபர்களுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிறுவனங்களிலேயே இந்த சம்வம் நிகழ்ந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

English summary
Two persons were killed today after inhaling poisonous gas from waste water tank when they tried to clean it in Neyveli. Both are contract workers of NLC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X