For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும் என அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும்- வீடியோ

    சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

    இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின்போது பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும் என்று அறிவித்தார். அதேபோல, மார்ச் 6-ம் தேதி 11-ம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கும் என்றும் மார்ச் 14-ம் தேதி 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    +2 exams on March 1 next year: Minister Senkottaian

    முன்னதாக, பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன என்றார்.

    மேலும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி, தனியார் பள்ளி மோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் பதிலளித்தார்.

    English summary
    The Minister Senkottaian said the Plus Two exams will be held on March 1 next year. Minister further said that, On March 6, a general election for Class 11 and On March 14, a general examination for Class 10 will be held.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X