For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகையில் இரு தரப்பு மீனவர்கள் மோதல்... 500 பேர் கைது

மீன்பிடித் துறைமுகங்களை பயன்படுத்துவதில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நாகையில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 படகுகளுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நாகை: நாகையில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, எதிர்த்தரப்பினரை கைது செய்யக்கோரி, பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு, மற்றொரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களுக்கிடையே பழைய மற்றும் புதிய மீன்பிடித் துறைமுகங்களை பயன்படுத்துவதில் பிரச்சனை இருந்துள்ளது.

2 factions of fishermen clashed in Nagappattinam

அண்மையில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு மீனவர்களும் அரிவாளால் வெட்டிக் கொண்டதில், படுகாயமடைந்த 6 பேர் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் நின்றிருந்த 3 படகுகளுக்கு இரு தரப்பினை சேர்ந்த சிலர் தீ வைத்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்ததால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை மருத்துவமனையில் திரண்ட இரு கிராம மக்களும் ஒருவரைக்கொருவர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலையில் நாகை பேருந்து நிலையத்தை, 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு, எதிர்த்தரப்பினரை கைது செய்யக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். மீனவர்கள் மோதல் தொடர்பாக 500 பேரை போலீஸார் கைது செய்தனர்.

English summary
An issue about using old and new fishing ports between two factions of Nagai Fishermen. 3 boats which were in Nagai port trust were set to fire by some unknown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X