For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா சூறை காற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள்.. 2 பேர் மாயம்

கர்நாடகா சூறை காற்றில் சிக்கி குமரி விசைபடகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

Google Oneindia Tamil News

Recommended Video

    நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மாயம்

    கன்னியாகுமரி: கர்நாடகா சூறை காற்றில் சிக்கி குமரி விசைபடகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மீனவர்கள் மாயமாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சிலுவை பிள்ளை. இவர் தனது விசைபடகில் சக மீனவர்களுடன் கடந்த மூன்றாம் தேதி குஜராத் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றார்.

    2 Kanniyakumar fishermen is missing in Near Karnataka

    மீன்பிடித்து விட்டு விசைப்படகில் திரும்பவரும் போது கர்நாடகா மாநிலம் கார்வார் பகுதியில் சுழட்டியடித்த சூறை காற்றில் விசைப்படகு சிக்கிக் கொண்டது. இதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மீனவர்கள் நடுக்கடல் நீரில் விழுந்தனர்.

    நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிய 4 பேரை உடனிருந்தவர்கள் போராடி மீட்டனர். ஆனால் அருள்ராஜ், புஷ்பராஜ் என்ற மீனவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. மாயமான 2 மீனவர்கள் குறித்து கடலோர காவல் படையினருக்கு அவர்கள் உடனடியாக தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த கடலோர காவல் படையினருடன் மீனவர்களும் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 மீனவர்கள் மாயமானதால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    English summary
    The fisherman's boat collapsed after the wind hit the ground. There are 2 people missing. Coast Guard soldiers are involved in the search for them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X