For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் டீச்சர்.. நம்பி சென்ற ஆசிரியை.. பணம் பறித்த மோசடி கும்பல்

பள்ளி ஆசிரியையை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

திருப்பூர் : அரசு பள்ளி ஆசிரியைக்கும் அவரது ஆண் நண்பருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஆசிரியையிடம் பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகலா.. 43 வயதாகிறது.. கல்யாணமாகி விவாகரத்து பெற்றவர்.. இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டிராயிங் டீச்சராக வேலை பார்க்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சசிகலா, பல்லடத்தில் ஒரு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது தன்னுடன் ஸ்கூலில் படித்த ஆசாத் என்பவரை சந்தித்தார்.. விவாகரத்து ஆன விஷயத்தையும் இவரிடம் பகிர்ந்துகொண்டார்.. உடனே ஆசாத், சசிகலாவை கல்யாணம் செய்துகொள்வதாக சொன்னார். ஆனால், ஆசாத் ஏற்கனவே கல்யாணமானவர்.

ஆசாத்

ஆசாத்

இருவரும் தினமும் செல்போனில் பேசி கொண்டே வந்தனர்.. திடீரென ஆசாத்திடம் இருந்து போன் எதுவும் வரவில்லை.. போன் போட்டாலும் எடுக்கவில்லை.. இதனால் குழம்பி போயிருந்தார் சசிகலா. அந்த சமயத்தில்தான், கடந்த 30-ம் தேதி சசிகலாவுக்கு ஒரு போன் வந்தது.. ஆசாத்தின் நண்பர் மதன் என்று சொல்லி ஒருவர் பேசினார்.

சசிகலா

சசிகலா

ஆசாத்துடன் கல்யாணம் செய்துவைக்கிறேன், 1 லட்சம் தருவீர்களா என்று கேட்டார். அதற்கு சசிகலாவும் ஒப்பு கொண்டுள்ளார். 1ம் தேதி மதியம் 12 மணிக்கு அவினாசி சாலையில் உள்ள பப்பிஸ் ஹோட்டல் அருகே சசிகலாவை காத்திருக்க சொன்னார்.. அதன்படியே காத்திருந்த சமயம், ஒரு கார் வந்தது.. அதில் ஏறி கொண்டபிறகுதான் தெரிந்தது அந்த காரில் அபுதாகீர், மணிகண்டன், சசிகுமார் ஆகியோர் இருந்துள்ளனர்.

அரிவாள்

அரிவாள்

ஆசாத் எங்கே என்று சசிகலா கேட்டதற்கு, பணத்தை முதலில் தரும்படி கேட்டனர். இதற்கு சசிகலா மறுக்கவும், கொலை செய்துவிடுவோம் என்று காருக்குள்ளேயே அரிவாளை காட்டி மிரட்டினர். 2 நாட்களாக அதாவது 3-ந் தேதி சாயங்காலம் வரை சசிகலாவுக்கு சாப்பாடு எதுவுமே தராமல் காரிலேயே மிரட்டி வைத்து ரூ.90 ஆயிரம் மிரட்டி வாங்கி உள்ளனர். பிறகு ஒருவழியாக சசிகலா அங்கிருந்து தப்பித்து உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிவந்து, திருமுருகன்பூண்டி போலீசிலும் புகார் அளித்தார்.

கைது

கைது

இதையடுத்து, டீச்சரை கடத்திய அபுதாகீர், அவரது தம்பி தஸ்தகீரை போலீசார் கைது செய்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமான விசாரணையில், ஆசாத், சசிகலா டீச்சர் பற்றி நண்பர்களிடம் சொல்லி உள்ளார்.. இதை பயன்படுத்திதான் நண்பர்கள் டீச்சரை கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்டனர் என்பது தெரியவந்தது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததே ஆசாத்துக்கு தெரியாது என்பதுதான் அதிர்ச்சியே!

English summary
two people arrested for school teacher was abducted in the car rs 90,000 and police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X