For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: கடற்படை நீர்மூழ்கி கப்பலில் விஷ வாயு தாக்கி இருவர் பலி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை துறைமுகத்தில் கடற்படை நீர்மூழ்கி கப்பல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் விஷ வாயு தாக்கியதில் பரிதாபமாகப் பலியானார்கள்.

நேற்று மாலை, சென்னை துறைமுகத்தில் ஐ.என்.எஸ் வக்ளி என்ற கடற்படை நீர்மூழ்கி கப்பலில் ஒப்பந்த தொழிலாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷ வாயு வெளிப்பட்டது.

இதில், சம்பவ இடத்திலேயே மகேந்திரன் என்ற தொழிலாளி பலியானார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தி்ன் அதிகாரி பவானிசங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும், விஷவாயுவால் பாதி்க்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் கரம் தீப்சிங் ஆகியோர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Two persons died in a poisonous gas leakage while they were involved in a maintenance work of a submarine ship
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X