For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவேற்காடு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை.. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இடமாற்றம்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

    திருவேற்காடு: சென்னை திருவேற்காட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோலடி- செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி ரேணுகா. செவிலியரான இவர் தனது வீட்டின் அருகே கழிவறை கட்டி வருகிறார். இதனால் இடதகராறு காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி என்பவருடன் ரேணுகாவுக்கு மீண்டும் சண்டை ஏற்பட்டது.

    ஒரு சார்பாக பேச்சு

    ஒரு சார்பாக பேச்சு

    இதையடுத்து அமிர்தவள்ளி அளித்த புகாரின்பேரில் இரு தரப்பினரையும் திருவேற்காடு போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அதிமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் மகேந்திரன் மற்றும் கவுன்சிலரின் பேச்சை கேட்டு கொண்டு அமிர்தவள்ளிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.

    தீக்குளிப்பு

    தீக்குளிப்பு

    இதையடுத்து மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு காவல் நிலையத்திலேயே தீவைத்து கொண்டார் ரேணுகா. இதையடுத்து தீயை அணைத்த போலீஸார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உரையாடல்

    உரையாடல்

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரேணுகா உயிரிழந்தார். இந்நிலையில் போலீஸார் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசுவதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக இறப்பதற்கு முன் அவரது உரையாடல் வெளியாகியுள்ளது.

    இடமாற்றம்

    இடமாற்றம்

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    English summary
    A woman allegedly set herself on fire in front of the Thiruverkadu police station on Tuesday afternoon. Chennai Police commissioner transferred two policemen after hearing the lady's statement before she died.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X