For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐயப்ப பக்தர்கள் போல வேடமிட்டு பணம் திருடிய 2 பேர் கைது

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்கள் போல் வேசமிட்டு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அடைக்கலம். திருச்செந்தூர் கோயில் கடலில் சிப்பி அரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சிப்பி அரிப்பதற்காக கடலில் இறங்க தனது சட்டையை கழற்றி சிப்பி அரிக்க சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது சட்டையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. அதில் 6468 ரூபாய் வைத்திருந்துள்ளார். இதுகுறித்து அடைக்கலம் உடனடியாக திருச்செந்தூர் கோயில் போலீஸ் நிலையததில் புகார் செய்தார்.

இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் விக்கனேஷ் நாழி கிணறு அருகே பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். ஐயப்ப பக்தர் வேடம் அணிந்த வாலிபர் விக்னேஷ்வரனிடம் சென்று கீழே ரூ.10 கிடக்கிறது. உங்களுடையதா என்று கேட்டுள்ளார். அப்போது விக்னேஷ் திரும்பி பார்த்தபோது அந்த வாலிபர் அவர் பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் எஸ்ஐ மீனா ஆகியோர் கோயில் பகுதியில் ரோந்தை அதிகப்படுத்தினர். அப்போது ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சந்தேகம் படும் படி நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தை சேர்ந்த ஜகுபர் சாதிக் என்றும் அவர் அடைக்கலம் சட்டையை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. மற்றொருவர் திருச்சி மாவட்டம் காட்டூரை சேர்ந்த ராஜா என்றும் அவர் செல்வத்திடம் ரூ.10 ஆயிரததை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். வேறு எங்காவது இது போன்று பணம் பறித்தார்களா என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

English summary
Police on Sunday arrested two persons who had allegedly stolen money from devotees in Tiruchendur Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X