• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Crime stories 2019: சித்தியுடன் உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. கொன்ற காமவெறியன்

|

உளுந்தூர்பேட்டை: காப்புக்காட்டில்.. ஆணுறைகள் சிதறி கிடக்க.. 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை இந்த வருடம் ஏற்படுத்தியது.. அது மட்டுமல்ல.. சித்தியுடன் ஏற்பட்ட உறவு காரணமாகவே சொந்த தம்பியையே அண்ணன் கொன்ற சம்பவம் அதைவிட பெரிய அதிர்ச்சி மக்களுக்கு தந்தது.

கடந்த ஜூலை மாத இறுதியில் நடந்த சம்பவம் இது: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் அயன் குஞ்சரம். இங்கு வசித்து வருபவர் கேசவன். வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி. இவர் கூலிவேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு 2 மகன்கள்.. மூத்த மகன் சரத்குமார், 21 வயதாகிறது.. இளைய மகன்தான் சிவக்குமார். 15 வயது சிறுவன். எலவனாசூர்கோட்டை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

குளிக்கும்போது வீடியோகால்.. பெண் குரலில் பேசிய இளைஞர்.. வீடியோவை காட்டி மிரட்டி..குளிக்கும்போது வீடியோகால்.. பெண் குரலில் பேசிய இளைஞர்.. வீடியோவை காட்டி மிரட்டி.."வெட்டி" மகேஷ் கைது

நள்ளிரவு

நள்ளிரவு

சிவக்குமார் ஒரு ஞாயிற்றுக்கிழமை, வெளியே விளையாட போனவன் திரும்பி வரவே இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் எங்கெங்கோ தேடியும் கிடைக்கவே இல்லை. அப்போது அங்குள்ள வனப்பகுதியான காப்புக்காடு என்ற இடத்திற்கு, நள்ளிரவில் சென்றவர்கள் சிவக்குமார் பிணமாக கிடப்பதை பார்த்துள்ளனர். கழுத்து மிக கொடூரமாக அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தான் சிவக்குமார். எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட, அவர்களும் விரைந்து வந்து, தீவிர விசாரணையில் இறங்கினர்.

விசாரணை

விசாரணை

கொலை நடந்த இந்த காட்டுப் பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் அழகிகளை அடிக்கடி கூட்டி வந்து ஜாலியாக இருப்பார்களாம். அப்படிதான் யாரோ பெண்களை கூட்டி வந்து உல்லாசமாக இருந்த சமயம், சிவக்குமார் நேரில் பார்த்திருக்கலாம் என்றும், ஊருக்குள் போய் இதை சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவும், கழுத்தை அறுத்து கொன்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

ஆனால் விஷயமே வேறு.. விசாரணையின்போது, மோப்ப நாய் ராக்கி.. நேராக ஓடிப்போய் சிவக்குமார் வீட்டு வாசப்படியில் போய் படுத்து கொண்டுவிட்டது. அதனால் போலீசார் சிவக்குமார் வீட்டைதான் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்தனர்.. அப்போது சிக்கியவன்தான் சிவக்குமாரின் அண்ணன் சரத்குமார்.

பராசக்தி

பராசக்தி

அப்பா வெளிநாட்டில் இருக்கவும், பெற்ற தாய் பராசக்தி இஷ்டத்துக்கும் ஆடியிருக்கிறார். தாயின் செயல்பாடுகளை சரத்குமார் நன்றாக அறிந்திருந்தும், சொந்த சித்தியுடன் கள்ள உறவு வைக்க ஆரம்பித்திருக்கிறான் சரத்குமார். அப்படி ஒருநாள் ஜாலியாக இருந்தபோது, இந்த கண்றாவியை, சரத்குமாரின் உடன்பிறந்த தங்கை நேரில் பார்த்துவிட்டாள். அதனால் தங்கச்சியையும் கொலை மிரட்டல் விடுத்தே பாலியல் கொடுமையை செய்திருக்கிறான் இந்த சரத்குமார். சரத்குமார் முரடன் என்பதால் எதையுமே அந்த பெண்ணும் வெளியில் சொல்லவில்லை.

கொலை

கொலை

ஆனால் அண்ணன், தன் அக்காவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை சிவக்குமார் பார்த்துவிட்டான். இதை வெளியில் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில்தான் அவனை கொல்ல குடும்பமே முடிவு செய்தது. முயல் வேட்டை என்றால் சிவக்குமாருக்கு ரொம்ப பிடிக்குமாம். சம்பவத்தன்று, முயல் வேட்டைக்கு போகலாம் என்று சொல்லி, காப்புக்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளான். பாறை இடுக்கில் முயல் இருக்கிறது பார், அதை பிடி என்று சொல்லவும் பாறைக்குள் முயலை பிடிக்க தலையை விட்டான் சிவக்குமார்.

அரிவாள்

அரிவாள்

அப்போதுதான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவக்குமாரின் தலையை வெட்டி உள்ளான். சித்தியும், அக்காவும், சிவக்குமாரின் காலை கெட்டியாக பிடித்துக் கொள்ள, சரத்குமார் கழுத்தை நிதானமாக அறுத்து கொன்றான். சொந்த தங்கையை நாசம் செய்தது முதல் தவறு, சொந்த சித்தியுடன் கள்ள உறவு வைத்திருந்தது அடுத்த தவறு, கூட பிறந்த தம்பியை கொன்றது 3-வது தவறு.. என தவறுமேல் தவறு செய்த சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகாமல் உள்ளதுதான் நிஜம்!

 
 
 
English summary
2019 Year Ender crime stories: younger brother murdered by his own brother due to illegal relationship with aunty and own sister near villupuram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X