For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம இடத்திற்கு பிரச்சனை வரும்.. இப்போதே எதிர்ப்போம்.. ரஜினியை அதிமுக கண்டிக்க இதுதான் காரணம்!?

நடிகர் ரஜினிகாந்தை அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் கடுமையாக எதிர்ப்பதற்கு 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது என்று அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்து.. ரஜினிகாந்த் பரபர பேட்டி - வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் கடுமையாக எதிர்ப்பதற்கு 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது என்று அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்று கூறியுள்ளார். ரஜினி இப்படி மன்னிப்பு கேட்க மறுத்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் குறித்த ரஜினியின் இந்த கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    கிட்டத்தட்ட எல்லா அதிமுக அமைச்சர்களும் ரஜினியை எதிர்த்து பேசிவிட்டனர். அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார், கடம்பூர் ராஜு என்று முக்கியமான அமைச்சர்கள் எல்லோரும் அதிமுக சார்பாக ரஜினிக்கு எதிராக பேசிவிட்டனர். அதிமுக அமைச்சர்களின் இந்த கோபத்தை பார்த்து ரஜினி தரப்பும் ஆடிப்போய் இருக்கிறது.

    அதிர்ந்து போன பாஜக தலைகள்.. ரஜினிக்கு எதிராக கொதித்தெழுந்த அதிமுக அமைச்சர்கள்.. செம திருப்பம்! அதிர்ந்து போன பாஜக தலைகள்.. ரஜினிக்கு எதிராக கொதித்தெழுந்த அதிமுக அமைச்சர்கள்.. செம திருப்பம்!

    என்ன காரணம்

    என்ன காரணம்

    நடிகர் ரஜினிகாந்தை அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் கடுமையாக எதிர்ப்பதற்கு 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது என்று அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆம் ரஜினியை வைத்து பாஜக மிக முக்கியமான திட்டங்களை சட்டசபை தேர்தலுக்காக போட்டு வருகிறது. தமிழகத்தில், அதிமுக - பாஜக - ரஜினியின் கட்சி கூட்டணியை உருவாக்கும். இதே கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக நினைக்கிறது.

    2021 தேர்தல்

    2021 தேர்தல்

    இந்த கூட்டணியில் முதல்வர் பொறுப்பை பாஜக தலைவர்கள் யாரும் கேட்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு உள்ள தலைவர்கள் யாரும் அக்கட்சியில் இல்லை. மாறாக, ரஜினிகாந்தை முதல்வராக்க பாஜக நினைக்கும் என்று கூறுகிறீர்கள். அதாவது பாஜக - அதிமுக - ரஜினி கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும். அதன் முதல்வராக ரஜினி இருப்பார் என்று கூறுகிறார்கள்.

    கோபம் அடைய செய்தது

    கோபம் அடைய செய்தது

    இதுதான் அதிமுகவை கொஞ்சம் கோபம் அடைய செய்துள்ளது. அதிமுகவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இல்லை. உள்ளாட்சி தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் செல்ல முதல்வர் பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். அவருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.

    ஓ.பி. எஸ் ஆசை

    ஓ.பி. எஸ் ஆசை

    அதேபோல் இன்னொரு பக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த தேர்தலில் எப்படியாவது முதல்வர் பதவியை பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார். அதிமுக தேர்தலில் வென்றால், எப்படியாவது முதல்வர் பதவியை பெற வேண்டும். அதற்கு இப்போதே சரியாக காய் நகர்த்த வேண்டும் என்று நினைக்கிறார். இதனால்தான் ஓ.பன்னீர்செல்வம், ஓ. பி ரவீந்திரநாத் என்று எல்லோரும் பாஜகவிற்கு அதிக அளவில் ஆதரவாக பேசி வருகிறார்கள்.

    ஆனால் ரஜினி

    ஆனால் ரஜினி

    அதேபோல் முதல்வர் பதவி இல்லாமல் ரஜினி, அரசியலுக்கு வரவும் விரும்ப மாட்டார்.கண்டிப்பாக முதல்வர் பதவி வேண்டும் என்று அவர் நினைப்பார். இதனால் அதிமுக - பாஜக தலைவர்களுக்கு இடையே போட்டி எதிர்காலத்தில் நிகழ வாய்ப்புள்ளது. இதனால்தான் அதிமுக இப்போதே ரஜினியை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது. எதிர்காலத்தில் அவரை கட்டுப்படுத்தும் நோக்கி அதிமுக தலைவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று கூறப்பட்டுகிறது .

    அதிமுக எப்படி

    அதிமுக எப்படி

    அதிமுக தலைவர்களின் இந்த கோபமாக ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கள் தலைவர் இன்னும் அரசியல் அறிவிப்பை வெளியிடவில்லை என்ற கோபத்தில் அவரின் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவரின் முதல்வர் கனவிற்கு அதிமுக மூலம் சிக்கல் ஏற்படலாம் என்று நிலை உருவாகி உள்ளது. இதனால் விரைவில் அதிமுக vs ரஜினி சண்டையை பார்க்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    2021 election may be the reason for AIADMK's fight with Actor Rajinikanth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X