For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 21 பேர் குலு மணாலியில் சிக்கி தவிப்பு.. உணவின்றி தவிப்பு

கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட பள்ளி ஊழியர்கள் 21 பேர் குலு மணாலியில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட பள்ளி ஊழியர்கள் 21 பேர் மணாலியில் சிக்கி தவிப்பு..வீடியோ

    ஓசூர்: கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட பள்ளி ஊழியர்கள் 21 பேர் குலு மணாலியில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள சப்தகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு பள்ளி தாளாளர் வணங்காமுடி முதல்வர் பத்மாவதி மற்றும் ஆசிரியர்களான வினோதினி ,சத்தியா, முருகம்மாள், முனீஸ்வரி, பத்மா, ஷீலா, சாந்தா, நாகலக்ஷ்மி, மற்றும் 6 குழந்தைகள் உட்பட 21 பேர் இமாச்சல பிரதேசம் பகுதியில் உள்ள குலுமணாலி பகுதிக்கு கடந்த 21ஆம் தேதி பெங்களூர் வழியாக புது டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

    அங்கிருந்து மணாலிக்கு 21ஆம் தேதி சென்றடைந்தனர். ஆனால் 22ஆம் தேதி சனிக்கிழமை காலை முதல் அங்கு கனமழை பெய்து வருவதால் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    25 பேர் தவிப்பு

    25 பேர் தவிப்பு

    அவர்கள் டில்லியிலிருந்து 3 சமையலர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி ஒருவரையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். மொத்தம் இருபத்தைந்து பேர் அங்கு தற்போது ஊருக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

    சாலை வசதி இல்லை

    சாலை வசதி இல்லை

    சாப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் இல்லாமல் உள்ளனர். ஆனால் ஊருக்கு நாளை காலை இங்கு வருவதாக இருந்தது. ஆனால் அவர்கள் அங்கு பெய்துவரும் கனமழையால் சாலை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி வந்து அங்கிருந்து பெங்களூர் வந்து ஓசூர் வரவேண்டி உள்ளது.

    ஆட்சியருடன் பேச்சு

    ஆட்சியருடன் பேச்சு

    ஆனால் அந்த சாலைவசதி இல்லாததால் இன்னும் இரண்டு நாட்களில் வருவார்கள் என உறவினர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அங்கிருந்து பள்ளி தாளாளர் வணங்காமுடி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரன் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குழு கலெக்டர் செல்வ மகேஷ் அவருடன் பேசியுள்ளார்.

    ஆட்சியர் உறுதி

    ஆட்சியர் உறுதி

    மீண்டும் ஊருக்கு திரும்ப தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் வாக்குறுதி கொடுத்துள்ளதாக அவர் மொபைல் போன் மூலமாக நிருபர்களிடம் தெரிவித்தார்.

    English summary
    21 persons including 6 children belongs to Kirshanagiri trapped in Manali.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X