For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.எல்.ஏ. சீட் கிடைச்சாச்சு.... அரசு வேலையை ராஜினாமா செய்த 22 அதிமுக வேட்பாளர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதால் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் 22 பேர் இதுவரை அவர்கள் பணியாற்றிய அரசு பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுவோர் ஆதாயம் தரும் அரசு பணிகளில் இருக்கக் கூடாது என்ற, தேர்தல் விதிமுறைகளின்படி அவர்கள் பதவி விலகி உள்ளனர்.

22 ADMK candidates resign from their govt position

சமூக நல வாரிய தலைவர் பதவியில் இருந்து சி.ஆர்.சரஸ்வதி, சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவர் பதவியில் இருந்து ஜே.சி.டி.பிரபாகரன், வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழ்மகன் உசேன் ஆகியோர் விலகியுள்ளனர்.

அதே போன்று பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பதவியில் இருந்து சுந்தரராஜன், தமிழ்நாடு அரசு சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து எஸ்டிகே ஜக்கையன் ஆகியோர் விலகியுள்ளனர். இதேபோல் மேலும் 17 பேர் தங்கள் பதவியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
ADMK canditates who are all in Government work, resigned their position for election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X