For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதந்திர தினத்தையொட்டி தமிழக போலீஸ் அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக காவல்துறை அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறப்பாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

tamilnadu police

அதில் சிறந்த சேவை செய்ததற்கான விருது, போலீஸ் அகாடமி ஐஜி அம்ரேஷ் பூஜாரி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுதர்சன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல சிறப்பாக பணியாற்றியதற்கான விருது, மதுரை டிஐஜி ஆனந்த் குமார் சோமானி, கமாண்டோ படை பள்ளி எஸ்பி என்.டி.ரமேஷ், மணிமுத்தாறு சிறப்பு காவல்படையின் கமாண்டன்ட் ஜெயவேல், மதுரை மதுவிலக்கு கூடுதல் எஸ்பி மாரியப்பன், சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி கூடுதல் எஸ்பி கஜேந்திரகுமார், டிஜிபி அலுவலக சிறப்பு புலனாய்வுப் பிரிவு கூடுதல் எஸ்பி ஸ்ரீதர்பாபு, திருச்சி மதுவிலக்கு கூடுதல் எஸ்பி நடராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

மேலும் ஈரோடு மாவட்டம் காங்கேயம் டிஎஸ்பி சுருளிராஜா, நாமக்கல் டிஎஸ்பி மனோகரன், மதுரை நகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் புது குணத்தான் ஜேசு ஜெயபால், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஞானசேகரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அங்குசாமி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உலகநாதன்

தஞ்சை டவுன் டிஎஸ்பி தமிழ்செல்வன், ஈரோடு போச்சம்பள்ளி சிறப்பு காவல்படை உதவி கமாண்டன்ட் ஆறுச்சாமி, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, தஞ்சாவூர் உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சிவனருள், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர், உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன், செக்யூரிட்டிப் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர்லால், கோவை துடியலூர் எஸ்.ஐ. அப்பன், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்ஐ எழில்ராஜ் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது.

English summary
24 tamilnadu police officers selected for president award
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X