For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகங்கை அருகே ஒரே நேரத்தில் மர்மமான முறையில் கொத்தாக இறந்த 25 மயில்கள்!!

சிவகங்கை அருகே ஒரே நேரத்தில் 25 மயில்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    50-க்கும் மேற்பட்ட மயில்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள்- வீடியோ

    சிவகங்கை: மானாமதுரை அருகே ஒரே நேரத்தில் 25 மயில்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் வயல்வெளி பகுதயில் சந்திரன் என்ற 50 வயது விவசாயி 3 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்வெளியில் குத்ததைக்கு நெல் விவசாயம் செய்து வருகிறார்.

    தற்போது அவர் விவசாயத்திற்காக நெல்விதைகளை துாவியுள்ளார். இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் 25 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்மயில்கள் மர்மமான முறையில் கொத்தாக இறந்து கிடந்தன.

    25 மயில்கள் இறப்பு

    25 மயில்கள் இறப்பு

    25 மயில்கள் இறந்த கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இறந்து கிடந்த மயில்களை குவித்து வைத்து விட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    மாயமான மயில்கள்

    மாயமான மயில்கள்

    பின்னர் இரவு 7 மணிக்கு அவர்கள்சென்று பார்த்த போது இறந்து கிடந்த மயில்களை யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

    அதிகாரிகள் விசாரணை

    அதிகாரிகள் விசாரணை

    இதற்கு காரணமானவர்கள் மீது வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? அவற்றை கொன்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.

    விவசாயி கைது

    விவசாயி கைது

    இதில் விவசாயி சந்திரன் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புதைக்கப்பட்ட 25 மயில்களையும் உடற்கூறு ஆய்வுக்காக அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    English summary
    25 peacocks killed near in Sivagangai. Police inquires about it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X