For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடகுக் கடை ஜன்னலை உடைத்து 250 பவுன் நகைகள் அபேஸ்... கரூரில் அட்டகாசம்

Google Oneindia Tamil News

கரூர்: கரூரை அடுத்த பாலவிடுதியில் பூட்டியிருந்த தங்க நகை அடகுகடை ஜன்னலை உடைத்து 250 பவுன் மற்றும் ரூ 25 ஆயிரம் ரொக்கபணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் இந்த நகைக் கடை அருகில்தான் காவல் நிலையம் உள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாலவிடுதியில் மாலதி & கோ என்ற பெயரில் கடந்த 20 வருடங்களாக அடகுகடை நடத்தி வருபவர் அடைக்கப்பன் . இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

250 sovereign jewel looted near Karur

தொடர் மழையால் .இன்று காலை 6 மணியளவில் வழக்கம் போல் கடையை திறந்து பார்த்த போது ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று லாக்கரில் இருந்த 250 சவரன் தங்க நகை மற்றும் ரூ 25 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனதை அறிந்த கடை உரிமையாளர். அடைக்கப்பன் பாலவிடுதி காவல் நிலையத்திற்க்கு தகவால் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் காவல்துறையினர்.

250 sovereign jewel looted near Karur

மேலும் .திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் செந்தாமரை மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் .நிர்மல்குமார் ஜோஷி சம்பவ இடத்திற்க்கு சென்று ஆய்வு செய்து பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

250 sovereign jewel looted near Karur

காவல் நிலையத்திற்கு அருகே இக்கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பேரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
250 sovereign jewels were looted from a pawn shop near Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X