For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10ம் வகுப்பு தேர்வில் 28 கைதிகள் 'பாஸ்': ஆயுள் தண்டனை கைதி 406 மார்க்

By Siva
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி அன்புச்செல்வி 10ம் வகுப்பு தேர்வில் 406 மதிப்பெண் பெற்றுள்ளார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இம்முறை ஏராளமான மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். மேலும் பிற ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடலூர் மற்றும் வேலூர் சிறையில் உள்ள 28 கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். தேர்வு எழுதிய அனைத்து கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலூர் மத்திய மகளிர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியான அன்புச்செல்வி என்பவர் 500க்கு 406 மதிப்பெண் பெற்றுள்ளார்.

கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த செல்விக்கு கல்வி மீது ஆர்வம் உள்ளதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் செல்வியை படிக்குமாறு ஊக்குவித்தனர். கடந்த 3 மாதங்களாக அவர் தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.

சிறையில் இருந்து கொண்டே கைதிகள் தேர்வு எழுதுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
28 inmates of Vellore and Cuddalore prison have cleared SSLC exams. Life sentence inmate Anbuselvi has secured 406 marks in the exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X