For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முந்திரி தோப்பில் மீனாவை புதைத்தது ஏன்.. கோழிப்பண்ணை ஓனர் கமலம் பரபரப்பு வாக்குமூலம்

நெய்வேலி அருகே 5 வயது சிறுமியை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    முந்திரி தோப்பில் மீனாவை புதைத்தது ஏன்.. கோழிப்பண்ணை ஓனர் கமலம் பரபரப்பு வாக்குமூலம்-வீடியோ

    விழுப்புரம் மாவட்டம் கள்ளமேடு கிராமத்தை சேர்ந்தவர் உத்தண்டி. 35 வயதாகிறது. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு அம்சவள்ளி 7, மீனா 5, கனகவள்ளி 3, ஆகிய 3 பெண் குழந்தைகள்.

    நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் - கமலம் தம்பதி வீட்டில் தங்கி கோழிப்பண்ணையில் கொத்தடிமைபோல் வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-வது மகள் மீனா திடீரென்று காணாமல் போனாள். இதனால் பதறி போன பெற்றோர், நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யவும், அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    அப்போதுதான் விருத்தாசலம் அருகே உள்ள முந்திரி தோப்பில் மீனா கொலை செய்யப்பட்டு அந்த பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கை காலை உதைத்து விளையாடிய குழந்தை.. மண்ணுக்குள் புதைக்க போன அப்பா.. தாத்தா!கை காலை உதைத்து விளையாடிய குழந்தை.. மண்ணுக்குள் புதைக்க போன அப்பா.. தாத்தா!

    சந்தேகம்

    சந்தேகம்

    இதையடுத்து, போலீசார் ராஜேஸ்வரி வேலை பார்த்து வந்த கமலம் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கமலம் மீது அதிகமாக சந்தேகம் எழவும், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. கடைசியில் மீனாவை கொன்றது தான்தான் என ஒப்புக் கொண்டார்.

    வேர்க்கடலை

    வேர்க்கடலை

    போலீசாரிடம் சொன்னபோது, "என் வீட்டு மாடியில் வேர்க்கடலை காய வெச்சிருந்தேன். அதனை ராஜேஸ்வரியின் மகள் மீனா மிதித்துவிட்டாள். இதில் எனக்கு ஆத்திரம் வந்து, மீனாவின் தலைமுடியை பிடித்து இழுத்து மாடி சுவர் மீது மோதினேன். அவளுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. கொஞ்ச நேரத்தில் அவள் இறந்துட்டாள்.

    முந்திரி தோப்பு

    முந்திரி தோப்பு

    இதை அவங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லாமல் மூடி மறைச்சேன். என் பையன், மகள், உறவுக்கார பையன் அய்யப்பன் கிட்ட மட்டும் தகவல் சொன்னேன். அவர்களுடன் நானும் சேர்ந்து, மீனாவின் உடலை காரில் ஏற்றி முந்திரி தோப்புக்கு கொண்டு சென்று, அங்கு குழி தோண்டி புதைச்சிட்டோம்' என்றார்.

    கைது

    கைது

    இதையடுத்து கமலம் சொன்ன தகவலின்பேரில், மீனாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கமலம், அவரது மகள் அஞ்சலை, உறவினர் அய்யப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அருள்முருகன் மட்டும் தலைமறைவாக உள்ளதால் போலீசார் தேடிவருகின்றனர்.

    English summary
    Neyveli near five year old girl murder and 3 people including woman arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X