For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறியியல் கலந்தாய்வுக்கு 3 உதவி மையங்கள்.. நெல்லையில் தொடங்கப்பட்டது!

பொறியியல் கலந்தாய்வுக்கு நெல்லையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

நெல்லை: பொறியியல் படிப்புக்கு நெல்லையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் சேர்க்கைக்கு பயன் தருமா என்பது கேள்வி எழுந்து உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் என 500 என மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் சேர்க்கின்றனர்.

3 centers opened for engineering counselling in nellai

மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு இதுவரை அண்ணா பல்கலை கழக வாளகத்தில் வைத்து மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு வரும் கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் இருக்கும் இடத்தில் இருந்தே கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும். விண்ணப்பம் வழங்கும் தேதி, ஆன் கலந்தாய்வு தேதி பிளஸ் டூ தேர்வு முடிந்ததும் பின்னர் அறிவிக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு நெல்லை அண்ணா பல்கலை கழக மண்டல கிளை மையம், அரசு பொறியியல் கல்லூரியில் தலா 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பம் செய்யும் மாணவ, மாணவிகள் இந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆன்லைனில் கலந்து கொள்ளலாம்.

சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஏற்பாட்டினால் வரும் கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கு மாணவர்கள் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
3 centers opened for Engineering counselling in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X