For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலாகலமாகத் தொடங்கியது ‘கரிசல் திரைவிழா 2015’... 4 மாநில மாணவர்கள் குவிந்தனர்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை சார்பில் நடத்தப்படும் கரிசல் திரைவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் 4 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறையில் மாணவர்களால் மனோ மீடியா கிளப் என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் அவ்வப்போது திரைவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் படுகின்றன.

மேலும், ஆண்டுதோறும் கரிசல் திரைவிழா என்ற பெயரில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

10ம் ஆண்டு கரிசல் திரைவிழா...

10ம் ஆண்டு கரிசல் திரைவிழா...

அந்தவகையில் இந்தாண்டிற்கான கரிசல் திரைவிழா நேற்று தொடங்கியுள்ளது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழக தொடர்பியல் துறை தலைவர் முனைவர் பெ.கோவிந்தராஜூ தலைமை வகித்தார். மனோ மீடியா கிளப் தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஆ.கு.குமரகுரு, பதிவாளர் ஜான் பிரிட்டோ, சமூகவியல் பேராசிரியர் கண்ணன் ஆகியோர் பேசினர்.

துவக்க விழா....

துவக்க விழா....

துவக்க விழா நிகழ்வில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி, ‘தமிழ் ஸ்டூடியோ' அமைப்பின் நிறுவனர் திரு.மோ.அருண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் சீனுராம்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னை சாலைகள் தான்...

சென்னை சாலைகள் தான்...

விழாவில் அவர் பேசுகையில், ‘நான் தின்மும் செலவழிக்கும் நேரம் திரையரங்கோ, வீடோ இல்லை. சென்னை சாலைகள்தான்.

அமைதியான சூழல்...

அமைதியான சூழல்...

சென்னை தமிழர்கள் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பாதி நேரத்தை சாலை போக்குவரத்து நெரிசல், சிக்கனலில் நேரத்தை கழிக்கின்றனர். இந்த நிலையில் நான் பல்கலை கழக வளாகத்திலேயே அமைதியான சூழலில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.

மன நிறைவைத் தரவில்லை...

மன நிறைவைத் தரவில்லை...

கடந்த 20 வருடங்களாக திரை உலகில் நான் இருந்தாலும் 10 வருடங்கள் உதவி இயக்குனராக வாழ்க்கை கடந்து விட்டது. கடந்த 8 வருடங்களாக கூடல் நகர், தென்மேற்கு பருவ காற்று, நீர்ப்பறவை, இடம், பொருள், ஆகிய நான்கு திரைப்படங்களை என்னால் எடு்க்க முடிந்தது. ஆனால் இது எனக்கு மன நிறைவை தரவில்லை.

தன்னம்பிக்கை...

தன்னம்பிக்கை...

என்னை இந்த விழாவுக்கு பராம்பரியம் மிக்க பறை இசை அறைந்து அழைத்த போது இதன் நோக்கம் தெரிந்தது. பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை பேணிகாக்கும் உற்சாகம் உங்களிடம் தெரிகிறது. உங்களது உற்காசம் என்னிடம் தன்னம்பிக்கையை வளர்த்துள்ளது' என்றார்.

ஊடகம் சார்ந்த போட்டிகள்...

ஊடகம் சார்ந்த போட்டிகள்...

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஊடகத்துறை சார்ந்த போட்டிகளான புகைப்படம், குறும்படம், சமூக விழிப்புணர்வுப்படங்கள், மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், சிறந்த இளம் பத்திரிகையாளர், வானொலி அறிவிப்பாளர், ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

English summary
The three day inter college event 'Karisal thirai Vizha' is happening in Tirunelveli, Manonmaniam sundaranar University. The Event was organised by the communication department of the University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X