For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா... 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பெசன்ட் நகரிலுள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு வருகிற நாளை,03.9.2017 மற்றும் 07.9.2017 ஆகிய தினங்களில் அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மேற்படி மூன்று நாட்களும் பின்வரும் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3 day traffic diversion in Besant Nagar

வேளாங்கண்ணி மாதா ஊர்வலம் செல்லும் பாதையான 6வது அவென்யூ, 4வது மெயின் ரோடு, 2வது மற்றும் 5வது அவென்யூ ஆகிய தெருக்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

மாலை 04.00 மணி முதல் எம்.ஜி.சாலை 7வது அவென்யூ சந்திப்பிலிருந்து 6வது அவென்யூ, 4வது மெயின் ரோடு, சந்திப்பிலிருந்தும், 4வது மெயின் ரோடு, 3வது அவென்யூ சந்திப்பிலிருந்தும், மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது, சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில், எல்.பி சாலையிலிருந்தும், தாமோதர புரத்திலிருந்தும் பெசன்ட்நகர் பஸ் டெர்மினஸ் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

வாகனங்கள்நிறுத்துமிடங்கள் 32வது மற்றும் 33வது குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல்களில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் தெருக்களில் ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்தலாம்.

பெசன்ட் அவென்யூ செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும் எல்.பி.சாலை, எம்.ஜி சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர் பகுதிக்கு செல்லும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாகவும் செல்லலாம்.

இரவு 08.00 மணிக்கு மேல் எல்.பி. சாலை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்திலிருந்து திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாக செல்லலாம்.

திருவான்மியூர் சிக்னலில் இருந்து எல்.பி. சாலையில் வரும் வாகனங்கள் எல்.பி. சாலை, இந்திராநகர் 3வது அவென்யூ சந்திப்பில், இந்திரா நகர் 3வது அவென்யூவில் திருப்பிவிடப்பட்டு, இந்திராநகர் 1 வது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர்3வது குறுக்கு தெரு வழியாக சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சென்றடையலாம்.

சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையிலிருந்து கஸ்தூரிபாய் சாலை 3வது குறுக்கு தெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அத்தகைய வாகனங்கள் எல்.பி.சாலை வழியாக கஸ்தூரிபாய் நகர் செல்லலாம்.
வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

English summary
Police have announced 3 days traffic diversion in Besant Nagar in Chennai on the eve of Velankanni festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X