For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவர் ஸ்பீடில் பைக் ரைடு... 3 இளைஞர்கள் லாரியில் மோதி பலி... கள்ளக்குறிச்சி அருகே பரிதாபம்!

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    3 இளைஞர்கள் லாரியில் மோதி பலி-வீடியோ

    விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் சென்றனர். அப்போது, தியாக துருகம் அருகே புக்குளம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த இவர்கள், முன்னால் சென்ற லாரி மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 3 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    3 dead in road accident near Vilupuram

    விபத்து குறித்து விரைந்து வந்த தியாகதுருகம் போலீசார் உயிரிழந்த 3 இளைஞர்களின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு பைக்கில் 3 பேர் வந்ததுடன், வேகமாகவும் ஓட்டியுள்ளனர். அதிவேகமாக பைக் ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர்.

    English summary
    Lorry-bike collision occurred near Kallakurichi. Three people died on the spot. The police were investigating the mishap.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X