For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஎஸ்இ: 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்.. ஹைகோர்ட் எச்சரிக்கை

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

பாட நூல்கள் பறிமுதல்

பாட நூல்கள் பறிமுதல்

அப்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.

3 பாடங்கள் மட்டுமே

3 பாடங்கள் மட்டுமே

5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கில் நீதிபதி கிருபாகரன் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வீட்டுப்பாடம் கூடாது

வீட்டுப்பாடம் கூடாது

முன்னதாக நேற்று முன்தினம் 2ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்பதை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

சிபிஎஸ்இக்கு விளாசல்

சிபிஎஸ்இக்கு விளாசல்

மேலும் 2 ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் நடிகர்கள் சல்மான்கான், ரஜினி காந்த்,நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து கேட்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், நடிகர்கள் நடிகைகளை வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு சிபிஎஸ்இயின் தரம் குறைந்துவிட்டதா என்றும், நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனத்திற்கு இதுபோன்ற கேள்விகள் தேவையா என்றும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Chennai high court has ordered CBSE should teach 3 lessons only till 5th std. If the rule is not maintain books will be seized.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X