For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு டீசல் வழங்கியதாக மூவரிடம் விசாரணை

By Mathi
Google Oneindia Tamil News

3 local persons detained in US Ship case
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு டீசல் வழங்கியதாக 3 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீமேன் கார்டு ஓஹியோ என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த 11ந் தேதி இரவு மடக்கிப் பிடித்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான இக்கப்பலில் 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் இருந்தன.

ஆனால் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை.

இதைத் கப்பலில் இருந்த 35 பேரில் 33 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவர் பராமரிப்புப் பணிக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த கப்பலுக்கு டீசல் வழங்கியதாக 3 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
The Tamil Nadu ‘Q’ Branch police detained 3 persons who are providing fuel illegaly to U.S.-based ship Seaman Guard Ohio.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X