For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் தீக்குளித்து 3 பேர் பலியான வழக்கு.. கந்துவட்டி கும்பல் அதிரடி கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தீக்குளிப்பு சம்பவம்! மூன்று பேர் கைது-வீடியோ

    நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தென்காசியை அடுத்த காசி தர்மத்தை சேர்ந்தவராவர். காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    தங்களின் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளித்தனர். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிலர் வீடியோக்களை எடுத்துக்கொண்டிருந்த நிலையில், மனிதாபிமானமுள்ள பலர் ஓடிச்சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும், தீ குளித்த 4 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    100 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி முதலில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் குழந்தைகள் மதி சரண்யா,அட்சயா பரணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.
    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்து, அதில் மூன்றுபேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர் மிரட்டியதால்தான் இதுபோன்ற தற்கொலை முயற்சி செய்ததாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    மூன்று பேர் கைது

    மூன்று பேர் கைது

    இதையடுத்து, இசக்கிமுத்து குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக, அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்த தென்காசி அடுத்த, காசிதர்மம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ், மாமனார் காளி ஆகியோர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மாவட்டம் முழுக்க தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ஜெயலலிதா கொண்டுவந்த சட்டம்

    ஜெயலலிதா கொண்டுவந்த சட்டம்

    தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடைச் சட்டத்தை முன்னாள் முதல்வர்் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்தச் சட்டம், 2003ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது.

    கடன் கொடுப்பவர்கள், கடனைத் திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு அப்பாவிகள் மீது நடத்தும் கடுமையான நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அதைதடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அப்போது அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    மூன்று ஆண்டுகள் சிறை

    மூன்று ஆண்டுகள் சிறை

    ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ 30,000 அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் இடமுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ், 'மணிநேர வட்டி', 'கந்து வட்டி', 'மீட்டர் வட்டி', 'தண்டல்' போன்ற பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாகவும், கைதானவர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கும் சேர்த்து இவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    3 persons arrested after 3 person died by self-immolation in Nellai collector office on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X