For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுக்கோட்டை அருகே, பாம்புகள் சண்டையிட்டதால் தெறித்த விஷம்.. பள்ளி மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    பாம்புகள் சண்டையிட்டதால் தெறித்த விஷம்-வீடியோ

    புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டியில், உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த பாம்பிலிருந்து விஷம்பட்டதால் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கே திடீரென வந்த 3 பாம்புகள் ஒன்றொடொன்று சண்டையிட்டு விஷங்களை துப்பியுள்ளன.

    3 snakes came in school campus, students affected by fear

    இதைப் பார்த்த அங்கிருந்த மாணவர்கள் பயத்தில் அலறியுள்ளனர். அவர்கள் மீது பாம்புகளிடமிருந்து தண்ணீர் போன்ற திரவம் மாணவர்கள் மீது பட்டுள்ளது. அது விஷமாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் மாணவர்களை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    3 snakes came in school campus, students affected by fear

    அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பயப்படும்படியாக ஒன்றுமில்லை என்று கூறி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தியது.

    English summary
    3 snakes came to punchayat primary school campus at kuppaththuppatti in pudukottai district. students affected by fearness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X