For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானாமதுரையில் விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்: 30 பேர் படுகாயம்

தெருவில் செல்வோரை வெறிநாய்கள் கடித்ததால் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மானாமதுரையில் விரட்டி கடித்த வெறிநாய்கள்: 30 பேர் படுகாயம்-வீடியோ

    சிவகங்கை: சிவகங்கையில் வெறிநாய்கள் விரட்டி கடித்ததில் 30 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் ஏராளமான வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள் வீதியில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடித்து வருகிறது. இன்று காலை, நடை பயிற்சி சென்றவர்கள், கடைக்கு சென்ற பெண்கள் உட்பட 30 பேரினை இந்த வெறிநாய்கள் கடித்து காயங்களை ஏற்படுத்தி உள்ளன.

    30 persons were bitten stray dogs in Manamadurai

    இதையடுத்து மானாமதுரை மருத்துவமனையில் வெறிநாய் கடிபட்டவர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு செய்து ஊசி பற்றாகுறையினால் முதல் உதவி மட்டும் செய்யப்பட்டு, மேற்சிகிச்சைக்காக 8 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் சிவகங்கை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் இந்த வெறிநாய்களை பிடிக்க மானாமதுரை பேரூராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    30 persons were bitten stray dogs in Manamadurai this morning. They were admitted to the Sivagangai Medical College Government Hospital. They are being treated seriously there. The public demand to catch these street dogs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X