For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை.. ஆனைவாரி அருவியில் காட்டாற்று வெள்ளம்.. 300 பேர் தவிப்பு!

சேலம் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சேலம்: கல்வராயன் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை நாள் என்பதால் மக்கள் பொழுதுபோக்கு தளங்களில் குவிந்து விடுமுறையை கழித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்வராயன் மலைப்பகுதியிலம் மக்கள் குவிந்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

காட்டாற்று வெள்ளம்

காட்டாற்று வெள்ளம்

இதன் காரணமாக சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு சென்ற 300 பேர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

குளிக்க தடை

குளிக்க தடை

அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை காரணமாக, அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முட்டல் அருவி

முட்டல் அருவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 100 பேர் உயிர்தப்பினர். ஆத்தூர் அருகே முட்டல் அருவியில் குளிக்க சென்றவர்கள் திரும்பும் போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.

ஆற்றை கடந்ததால்

ஆற்றை கடந்ததால்

ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் அதிகரிக்கும் முன் ஆற்றை கடந்ததால் 100-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பியுள்ளனர்.

English summary
It is reported that more than 300 people have been trapped in the flood of Kalvarayan hills due to heavy rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X