For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாமக்கல் அருகே 3000 கடத்தல் மணல் மூட்டைகள் பறிமுதல்: கனிமவளத்துறை அதிரடி

கடத்தப்படவிருந்த 3000-க்கும் அதிகமான மணல்மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கடத்தப்படவிருந்த மணல் 3000-க்கும் அதிகமான மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

3000 sandbags were seized near Namakkal

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரையடுத்துள்ள பொன்மலர்பாளையம், கொந்தலம் போன்ற பகுதிகளிலிருந்து காவிரியாற்றிலிருந்து மணலை மூட்டைகளில் கட்டி இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்தப்படுவதாக மாவட்ட கனிமவளத்துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்த புகார்களையடுத்து, மாவட்ட கனிமவளத்துறை AD.ஜெயந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர் தமிச்செல்வி ஆகியோர் தனித்தனியாக அந்த பகுதிகளில் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 3000-க்கும் அதிகமான மணல் மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றினை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

3000 sandbags were seized near Namakkal

மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை கண்டதும், மணல் மூட்டைகளை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

3000 sandbags were seized near Namakkal
English summary
Last night in the areas of Namakkal district, they were kidnapped by bicycles from the Cauvery river near Paramathivelur in the district of the mineral department. More than 3000 sandbags were discovered and confiscated. The police are searching for more than 10 people who have escaped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X