For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 32 பேர் கைது.. அதிகாலையில் வீடு புகுந்து நடவடிக்கை

நாளை கோட்டை முற்றுகை நடைபெறும் ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 32 பேர் கைது- வீடியோ

    ஈரோடு: ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 32 பேரை அதிகாலையில் வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு ஈடுபடபோவதாக அறிவித்திருந்தது.

    32 People Arrested By The Jacto Jio Executives In Erode

    இதனால் போராட்டத்திற்கு செல்பவர்களை ஒடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை வீடுகளில் தூங்கி கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த 32 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பல நிர்வாகிகளை கைது செய்ய அவர்களது வீடுகளுக்கு போலீசார் சென்றதால் அவர்கள் வேறு இடங்களுக்கு சென்றனர்.

    பணிக்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என்பதால் பல நிர்வாகிகள் அரசு அலுவலக பணிகளை புறக்கணித்தனர். கைது செய்தாலும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    English summary
    In the early hours of Erode district, 32 people from the government employees were sleeping in the early hours of the night. The police went to their homes to arrest many more and they went to other places. Jacto jio Executives said the siege will be held despite arrest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X